துபாய், 8 அணிகள் இடையிலான 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாயில் நடந்து வருகிறது. இதில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியா தனது முதலாவது ஆட்டத்தில் தாய்லாந்தை 94 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடியது. இந்த நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2-வது லீக்கில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு ஹாங்காங்குடன் மோதுகிறது. கூடுதல் கவனம் தாய்லாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட் செய்து 9 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. ஒரு விக்கெட்டுக்கு 91 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்த இந்திய அணிக்கு மிடில் வரிசை சொதப்பலால் ஸ்கோர் வெகுவாக குறைந்து போனது. இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். முதல் முறை மற்றபடி இந்தியா பலம் வாய்ந்த அணியாக திகழ்வதால், குட்டி அணியான ஹாங்காங்கை எளிதில் சுருட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகள் சர்வதேச 20 ஓவர் போட்டியில் நேருக்கு நேர் மோத இருப்பது இதுவே முதல் முறையாகும். இலங்கை வெற்றி இதற்கிடையே 'பி' பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கை, அறிமுக அணியான இந்தோனேசியாவை சந்தித்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 7 விக்கெட்டுக்கு 124 ரன்களே எடுத்தது. ஒரு கட்டத்தில் 62 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்த அந்த அணியை நிலாக் ஷிகா சில்வா (50 ரன்), காவ்யா கவிந்தி (15 ரன்) மீட்டனர். அடுத்து 125 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்தோனேசியா 18.3 ஓவர்களில் 49 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இலங்கை 75 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பதிவு செய்தது. இலங்கை கேப்டன் சமாரி அட்டப்பட்டு ஹாட்ரிக் சாதனையுடன் 7 விக்கெட்டுகளை அள்ளினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/womens-asia-cup-cricket-india-vs-hong-kong-clash-today




