கின்ஷாசா, மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்த வைரஸ் காங்கோ மட்டுமின்றி உகாண்டா, லைபீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவி வருகிறது. எபோலா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் காங்கோ போன்ற நாடுகளுடனான விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. 930 பேர் பலி இந்நிலையில், காங்கோவில் 2,344 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், எபோலா வைரஸ் பாதிப்பால் 930 பேர் உயிரிழந்துள்ளதாக காங்கோ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் காங்கோ சுகாதாரத்துறை திணறி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/at-least-930-people-have-died-in-congos-ebola-outbreak




