மைசூர் பருப்பில் புரதம், நார்ச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளன. அளவோடு சாப்பிடும்போது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். ஆனால், சில உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் இதை அதிகமாக சாப்பிடக்கூடாது. யூரிக் அமிலம் அதிகமாக இருப்பவர்கள் மைசூர் பருப்பை அளவோடு சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள பியூரின், சிலருக்கு யூரிக் அமில அளவை அதிகரிக்கலாம். இதனால் மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டும். மைசூர் பருப்பில் உள்ள ஆக்சலேட் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, இவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. மைசூர் பருப்பில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் சிலருக்கு வயிற்று உப்புசம் மற்றும் வாயுத்தொல்லை ஏற்படலாம். அதிகமாக சாப்பிடும்போது அசிடிட்டி பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் அளவைக் குறைத்துக்கொள்ளலாம். மைசூர் பருப்பில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஆனால், இதை அதிகமாக சாப்பிடுவதால் மட்டும் உடல் எடை அல்லது கொழுப்பு அதிகரிக்கும் என்று கூற முடியாது. மொத்த உணவு அளவு மற்றும் தினசரி கலோரி உட்கொள்ளுதலும் முக்கியம். எந்த உணவாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மைசூர் பருப்பையும் உடல்நிலைக்கு ஏற்ப சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவே உடல்நலப் பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது பாதுகாப்பானது. காலை உடற்பயிற்சியா? மாலை உடற்பயிற்சியா? உடல் எடையைக் குறைக்க எது சிறந்தது? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/ampstories/photo-story/people-with-these-problems-should-avoid-mysore-paruppu




