தூத்துக்குடி, தூத்துக்குடி டேவிஸ்புரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இரண்டு வாலிபர்களை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து அரைக் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசார் தீவிர சோதனை தூத்துக்குடி தாளமுத்துநகர் டேவிஸ்புரம் பகுதியில் அரசு அனுமதியின்றி போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரி மேரி ஜெமிதா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற இருவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில், அவர்கள் தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த சந்தனராஜின் மகன் விஸ்வகணேஷ் (19) மற்றும் பீர்முகமது மகன் அப்சல் (20) என்பது தெரியவந்தது. கஞ்சா பறிமுதல் இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த அரைக் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-ganja-in-thoothukudi-2-youths-arrested




