வரலாற்றுச் சிறப்புமிக்க, வேலூர் கோட்டை வளாகத்திலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் கலை, தொல்லியல், மானுடவியல், புவியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வகை கலைப்பொருள்கள் இருக்கின்றன. நுழைவாயிலில் 16 அடி உயரமுள்ள டைரனோசொரஸின் கண்ணாடியிழை மாதிரியும், ஒரு சிற்பத் தோட்டமும் உள்ளது. அங்கு கல் சிற்பங்கள், வீரக்கற்கள், கல்வெட்டுகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள், பீரங்கி குண்டுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்துக்கு உள்ளே சென்றால், 8 வெவ்வேறு காட்சியகங்கள் வரவேற்கின்றன. அவை மாணவர்கள், பொது மக்கள், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இருக்கின்றன. ஏ.ஐ தொழில்நுட்பத்திலான ஐன்ஸ்டீன் உருவ சிலை இந்த நிலையில்தான் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறைகீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில், கோட்டை அருங்காட்சியகத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. அதன்படி, அருங்காட்சியகத்தில் ரூ.13 லட்சத்தில் 1.50 மீட்டர் அகலமும், 2.50 மீட்டர் உயரமும்கொண்ட பேசும் மரபொம்மையும், ரூ.15 லட்சத்தில் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பேசுவதைபோன்ற ஏ.ஐ தொழில்நுட்பத்திலான 1.75 மீட்டர் உருவ சிலையும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த செயல்முறை மாணவ - மாணவியர் மத்தியில் அறிவியல் சிந்தனைகளை வளர்ப்பதற்கான ஸ்மார்ட் திட்டமாகப் பார்க்கப்படுகிறது. ஐன்ஸ்டீனுடன் மாணவர்கள் பேசலாம், உரையாடலாம். ஐன்ஸ்டீனும் கேள்விகளுக்குப் பதிலளிப்பார் என்பதால், இந்தத் திட்டத்துக்கு பெரும் வரவேற்பு காணப்படுகிறது. பேசும் மரபொம்மை அதுமட்டுமல்லாமல், அருங்காட்சியகத்தில் வேலூர் மாவட்டத்தின் வரலாறு மற்றும் நினைவுச் சின்னங்கள், ஓவிய கலைக்கூடம் மற்றும் சுடுமண் சிற்பங்களுக்கான புதிய காட்சிக்கூடம், கல்சிற்ப காட்சியகம், சிறப்பு கண்காட்சியரங்கம், குழந்தைகள் கலைக்கூடம் மற்றும் புதிய சமண சிற்ப காட்சியக சுவர்ப் பலகைகள், பீட ஏற்பாடுகள், காட்சிபெட்டி அமைப்புகளும் செய்யப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் ஜூலை 4-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அதன்படி, கடந்த 3 நாள்களில் மட்டும் 2,746 நபர்கள் அருங்காட்சியகத்துக்கு ஆர்வமுடன் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர். தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வருகையும் அதிகரித்துள்ளதால், அருங்காட்சியகம் களை கட்டியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/literature/culture/talking-ai-powered-einstein-statue-vellore-museum-draws-attention




