திருவனந்தபுரம், கேரள மாநிலம் விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தில் இன்று முதல் முழுமையான சரக்கு ஏற்றுமதி - இறக்குமதி சேவை தொடங்கியுள்ளது. இதுவரை வெளிநாட்டு கப்பல்களில் வரும் சரக்குகளை மற்ற கப்பல்களுக்கு மாற்றி அனுப்பும் மையமாக செயல்பட்ட துறைமுகம், இனி நேரடியாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்குகளையும் கையாள உள்ளது. ஏற்றுமதி - இறக்குமதி சேவை தொடக்கம் கேரளவின் திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்ஞம் நகரில் இத்துறைமுகம் அமைந்துள்ளது. கேரள அரசு மற்றும் அதானி போர்ட்ஸ் இணைந்து உருவாக்கிய இத்துறைமுகம், இந்தியாவின் முதல் ஆழ்கடல் சரக்கு மாற்று துறைமுகமாகவும், தெற்காசியாவின் முதல் முழுமையான தானியங்கி சரக்கு பெட்டக துறைமுகமாகவும் உள்ளது. இந்த துறைமுகம் கடந்த 18 மாதங்களில் 20 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாண்டுள்ளது. தற்போது விளிஞ்ஞம் துறைமுகத்தில் நேரடி ஏற்றுமதி, இறக்குமதி சேவை தொடங்கியுள்ளதால் சரக்கு கையாளல் செலவு மற்றும் நேரம் குறைந்து, முதலீடு, வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழிஞ்ஞம் துறைமுகத்தில் நேரடி ஏற்றுமதி - இறக்குமதி சேவையை முதல்-மந்திரி வி.டி. சதீசன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/launch-of-direct-export-import-services-at-vizhinjam-port




