சண்டிகர், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல் - மந்திரியாக பகவந்த் மான் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக தனித்து களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. பிரதமர் மோடி பயணம் இந்நிலையில், பிரதமர் மோடி வரும் 17ம் தேதி பஞ்சாப் செல்கிறார். இந்த பயணத்தின்போது பல்வேறு ரெயில்வே திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். குறிப்பாக, மறுசீரமைக்கப்பட்ட ஜலந்தர் கண்டோன்மண்ட் ரெயில்வே நிலையத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ஜலந்தர் - வாரணாசி கூடுதல் ரெயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/pm-modi-to-visit-punjab-launch-rail-projects-as-bjp-gears-up-for-solo-fight




