கவுகாத்தி அசாமில் தொடர் கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் 1.7 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அசாமில் பருவமழையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், 12 மாவட்டங்களை சேர்ந்த 1.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள அம்குரி பகுதியில் வெள்ள நீரில் மூழ்கி ஒருவர் பலியாகி உள்ளார். அண்டை மாநிலங்களும் பாதிப்பு இதுபற்றி அசாம் மாநில பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்ட செய்தியில், நடப்பு ஆண்டில் அசாமில் வெள்ள பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது. அசாம் தவிர, நாகாலாந்து மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்களும் தொடர் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பிரம்மபுத்திரா ஆறு மற்றும் அதன் கிளை கால்வாய்களில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வெள்ள அபாய சூழல் சராய்தியோ மாவட்டத்தில் உள்ள தேசங்பானி பகுதியில் அமைந்த தேசங் ஆற்றில் இன்று காலை 9 மணி வரை 106.36 மீட்டர் மட்டத்திற்கு நீர் ஓடுகிறது. இது தொடர்ந்து அதிகரித்து வெள்ள அபாய சூழல் காணப்படுகிறது. திப்ரூகார் மாவட்டத்தில் உள்ள செனிமரி பகுதியில் உள்ள புரிதெஹிங் ஆற்றிலும் நீர்மட்டம் 102.66 மீட்டர் என்ற அளவில் காணப்படுவதுடன், தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தும் காணப்படுகிறது. அதனுடன், கவுரங், திகோவ், தன்சிரி உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ள அபாய சூழல் உள்ளது. நிவாரண பணி வெள்ளம் தொடர்ச்சியாக 30 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 580 கிராமங்கள் தற்போது பாதிக்கப்பட்டு உள்ளன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் நிவாரண பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/assam-floods-1-7-lakh-people-badly-affected




