சென்னை, ‘பீல் மை லவ்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. காதல் கதையை மையமாகக் கொண்ட படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள இந்த போஸ்டர், தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. ‘பீல் மை லவ்’ ‘96’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் ஆதித்யா பாஸ்கர் மற்றும் ‘அசுரன்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை அம்மு அபிராமி இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘பீல் மை லவ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஹரி பிரகாஷ் இயக்குகிறார். காதல், நகைச்சுவை, குடும்பம் காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமியுடன் ஐரா, ராஜய்யப்பா, நோப்லக் ஜேம்ஸ், பிரியங்கா, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு எம்.எஸ். சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜரவிவர்மா மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோர் இசையமைக்கின்றனர். வெளியானது புதிய போஸ்டர் ஹரி பிரகாஷ் இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. இந்த நிலையில், ‘பீல் மை லவ்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. காதல் கதையை மையமாகக் கொண்ட படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள இந்த போஸ்டர், தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/new-poster-of-the-movie-feel-my-love-released




