விழுப்புரம், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்க உத்தரவிட்டுள்ள முதல்-அமைச்சர், தங்களுக்கும் பைக் வழங்க வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பினர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்.எல்.ஏக்களுக்கு கார் தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள கார், ஓட்டுநர் உதவியாளர் மற்றும் மாதம் ரூ.75,000 பராமரிப்புத் தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் சமீபத்தில் சட்டபேரவையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே இந்தச் சலுகையை வழங்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர். ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பைக் இதனிடையே, எதிர்க்கட்சியான திமுக, ” இந்த கார் சலுகை தங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் தேவையில்லை” என அதிகாரப்பூர்வமாக மறுத்து அறிவித்தது. இந்தச் சூழலில், “கிராமப்புறங்களில் தினமும் களப்பணியாற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கே வாகன வசதி மிகவும் அவசியமானது” என வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பினர், தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். தினமும் மக்களை சந்திக்க கிராமப்புற மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றவும், ஊராட்சிகளுக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் தினமும் சென்று வரவும் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அரசு சார்பில் இருசக்கர வாகனம் (பைக்) வழங்க வேண்டும். வாகன பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவுகளுக்காகத் தகுந்த மாதாந்திர தொகையை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் அரசு, கடைக்கோடி கிராமங்களில் நேரடியாகச் செயல்படும் ஊராட்சி தலைவர்களுக்கும் குறைந்தபட்ச வாகன வசதியைச் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் எம்.எல்.ஏ.க்களுக்கான கார் சலுகை குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதங்கள் நடந்து வரும் வேளையில், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ‘பைக்’ கேட்டு மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/panchayat-leaders-petition-mlas-for-carswe-want-bikes



