வாஷிங்டன், ரஷியா மீதான பொருளாதார தடைகள் மசோதாவை நிறைவேற்ற அமெரிக்கா அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உயர்ந்துள்ளது. 100 சதவீதம் வரிவதிப்பு இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 30 சதவீதம் ரஷியாவிடமிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. ஈரான் போர் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட எண்ணெய் இறக்குமதி ரஷியாவில் இருந்தே நடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்டில் அமெரிக்காவில் ரஷியா மற் றும் ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் வகையில் மறைந்த எம்.பி. லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷியாவுக்கு எதிரான தடை மசோதா 2026) என்ற மசோதாவை செனட் சபையில் (மேலவை) அறிமுகப்படுத்தினார். மசோதா நிறைவேற்ற தீவிரம் இந்த மசோதா, செனட் சபையால் ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம் நிறைவேற்றப்பட்டது. தற்போது பிரதிநிதிகள் சபையில் (கீழவை) 214-211 என்ற கணக்கில் முதல்கட்ட நடைமுறை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று, இறுதி வாக்கெ டுப்பை நோக்கி தீவிரமடைந்துள்ளது. இந்த மசோதா தொடர்பாக நடைபெற்ற விதிகள் குழு கூட்டத்தில், 7-க்கு 3 என்ற வாக்குகள் அடிப்படையில் மசோதாவை நாடாளுமன்றத்தின் இறுதி வாக்கெடுப்பிற்கு முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. பிரதிநிதிகள் சபையின் இறுதி ஒப்புதல் கிடைத்தவுடன், இரு அவைகளின் கூட்டு ஒப்புதலுடன் இது ஜனாதிபதியின் கையெழுத்துக்கு அனுப்பப்படும். இந்தியாவுக்கு சவால் இந்த மசோதா மீது அமெரிக்க மக்களவையில் வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த மசோதா நிறைவேற் றப்பட்டு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டால், ரஷிய எரிசக்தியை அதிகளவில் வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் அதிகாரம் அவருக்கு கிடைக் கும். ரஷிய கச்சா எண்ணெயை வாங்கும் 2-வது பெரிய நாடாக இந்தியா இருப்பதால், இந்த மசோதா இந்தியாவுக்கு பெரும் சவாலாக அமைய வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தை கவனித்து வரும் மத்திய வெளியுறவுத்துறை மூத்த அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், “இந்திய அரசு இந்த முன்னேற்றங்களை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அமெரிக்க மக்களவையில் இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்ற பிறகுதான். அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்த தெளிவு கிடைக்கும். அதன் பிறகுதான் இது தொடர்பாக உரிய பதிலை இந்தியா அளிக்கும்" என்று தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/america-keen-on-imposing-100-tariff-on-india




