Doctor Vikatan: நான் கிட்டத்தட்ட 20 வருடங்களாக சிகரெட் பழக்கத்தில் சிக்கித் தவிக்கிறேன். அதை நிறுத்த பல முறை முயன்றும் என்னால் முடியவில்லை. சிகரெட் பழக்கத்தை அறவே நிறுத்த என்னதான் செய்வது? -dmurthy,விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் முதல் வேலையாக நீங்கள் எப்போதெல்லாம் சிகரெட் பிடிக்கிறீர்கள் என்பதைக் குறித்து வரவும். உதாரணத்துக்கு, டென்ஷன் அதிகமான நேரத்தில் பிடிக்கிறீர்கள் என்றால் டென்ஷனான சூழல்களிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் நல்ல மனநிலையில் இருக்கும்போது, மருத்துவரிடம் செல்லுங்கள். இருபது வருடப் பழக்கம் என்பதால், அது நுரையீரல் மற்றும் கல்லீரலில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும். முழு உடல் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்யுங்கள். ஒருவேளை பாதிப்பு இருப்பது தெரிந்தால் அதற்கான சிகிச்சைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். டீ அடிக்ஷன் மையங்களை நாடலாம். அதற்கு முன் சிகரெட் பழக்கத்தைக் கைவிட உதவும் நிகோடின் பேட்ச் ஒட்டுவது போன்று எளிய வழிகளை முயற்சி செய்து பாருங்கள். சிகரெட் உள்ளிட்ட போதைப் பழக்கங்களில் இருந்து விடுபட நினைக்கும் பலரும், பலமுறை முயற்சி செய்து அதில் தோல்வியைச் சந்திக்கிறார்கள். வேண்டாத எந்த ஒரு பழக்கத்தில் இருந்தும் விடுபட, முதலில் மனஉறுதி முக்கியம். அதற்கும், பிறகு அதைச் செயல்படுத்தவும் உங்களுக்கு சில பயிற்சிகள் அவசியம். சிகரெட் Doctor Vikatan: புகைப்பழக்கத்தை நிறுத்தியதும் நுரையீரல் எப்போது பழைய நிலைக்குத் திரும்பும்? 1. ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்ந்தெடுத்து, அதிலிருந்து கண்டிப்பாகப் புகை பிடிப்பதில்லை என்ற உறுதியான முடிவை எடுங்கள். 2. ஆரோக்கியம், குடும்பம், நோய் பயம் என சிகரெட்டை நிறுத்துவதற்கான காரணங்களை அடிக்கடி மனதுக்குள் நினைத்துப் பாருங்கள். 3. உங்கள் முடிவை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் சொல்லுங்கள். அவர்களின் ஆதரவு கிடைக்கும், கூடவே மீண்டும் பிடிக்கும் பயமும் குறையும். 4. தினமும் பிடிக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கையைக் படிப்படியாகக் குறைத்து வாருங்கள். 5. சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற தீவிரமான ஆசை (Craving) 3 முதல் 5 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். அந்தச் சில நிமிடங்களை ஆழமான மூச்சுப் பயிற்சி அல்லது நடப்பதன் மூலம் கடந்துவிட்டால் ஆசை தணிந்துவிடும். 6. சிகரெட் பிடிக்கும் ஆசை வரும்போதெல்லாம் ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். சிகரெட் பிடிக்கும் உந்துதல் ஏற்படும்போது ஸ்ட்ரெஸ் பால் (Stress ball) பயன்படுத்துவது, கைகளுக்கு வேறு வேலைகள் கொடுப்பது என கவனத்தைச் செலுத்துங்கள். Doctor Vikatan: முடி உதிர்வுக்கும் சிகரெட் பழக்கத்துக்கும் தொடர்பு உண்டா? 7. கவனத்தைத் திசைத்திருப்ப கடலை மிட்டாய், உலர் திராட்சை அல்லது சூயிங்கம் போன்றவற்றைச் சாப்பிடுங்கள். 8. புகை பிடிக்கும் நண்பர்கள், இடங்கள், சிகரெட் வாசனை ஆகியவற்றிலிருந்து தள்ளியே இருங்கள். 9. எந்தச் சூழலிலும் யார் வற்புறுத்தினாலும் சிகரெட் பிடிப்பதில்லை என்பதை வைராக்கியமாகக் கொள்ளுங்கள். 10. சிகரெட் பிடிக்கும் உந்துதல் ஏற்படும்போது ஸ்ட்ரெஸ் பால் (Stress ball) பயன்படுத்துவது, கைகளுக்கு வேறு வேலைகள் கொடுப்பது என கவனத்தைச் செலுத்துங்கள். மன உறுதியைவிட மிகச் சிறந்த தீர்வு வேறில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பலமுறை முயற்சியில் தோற்றாலும், இந்த முறை நிச்சயம் வெற்றிபெறுவீர்கள் என நம்புங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் என்ற பெயரில் வெளியாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/health/years-of-cigarette-habit-multiple-failures-10-firm-tips-to-quit




