சென்னை, தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு கற்கள், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களுக்கு அதிகளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதால், தமிழ்நாட்டிற்கு செயற்கை தட்டுப்பாடு எழுவதாகவும், தங்கு தடையின்றிப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய இந்த தற்காலிகத் தடை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்து இருந்தாலும், ஒருசிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என கேரள முதல் மந்திரி வி.டி.சதீசன், முதல்-அமைச்சர் விஜய்க்கு அவர் கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், கனிமவளங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த லிபின் பொன்னுசாமி லீசா என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/case-challenging-the-tamil-nadu-governments-ban-on-transporting-mineral-resources-to-other-states




