சென்னை, முன்னதாக, மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து கம்யூனிஸ்டுகள் பதிலளிக்க வேண்டும் என்றும், "திமுக ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை என கம்யூனிஸ்டுகளால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பதில் அளித்து கூறியதாவது:- அரசியல் பொதுவெளியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தும் முன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேச வேண்டும். அவருக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நீண்டகாலப் போராட்ட வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும். அதை அவர் படித்துத் தெரிந்துகொள்வதோடு நிறுத்தாமல், முதல்-அமைச்சர் விஜய்யிடமும் எடுத்துக் கூற வேண்டும். 5 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள்(தவெக) செய்யும் தவறுகளுக்கு நாங்களா பதில் சொல்ல வேண்டும்? நாங்கள் அளித்த ஆதரவு ஜனநாயகத்திற்கானது. கடந்த(திமுக) ஆட்சியில் நடைபெற்ற தவறுகளுக்கு நாங்கள் பதி சொல்ல வேண்டுமென கேட்கக்கூடாது; கடந்த ஆட்சியில் தொகு உடன்பாடு அவ்வளவுதான்; உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம் அவ்வளவுதான். தமிழகத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசை எந்தவொரு சூழலிலும் கவிழ்க்க வேண்டும் என்ற சிந்தனையோ அல்லது எண்ணமோ கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குக் கிடையாது. இத்தனை ஆண்டு கால அரசியல் வரலாற்றில் எந்தவொரு நீதிமன்றத்திலும் ஊழல் குற்றச்சாட்டுக்காக கம்யூனிஸ்டுகள் தண்டிக்கப்பட்டதாக வரலாறு இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியினர் எந்தக் காலத்திலும் லஞ்சம் பெற்றதும் இல்லை, பிறர் லஞ்சம் வாங்குவதையோ அல்லது ஊழல் புரிவதையோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்ததும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/no-intention-to-topple-the-tvk-government-m-veerapandian




