ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள மங்கம்மாபேட்டையைச் சேர்ந்த அம்மிக்கல் செதுக்கும் தொழிலாளி கோட்டையா, வயது 30. இவரின் மனைவி வள்ளி (23). இவர்களுக்கு 7 வயதில் பரத், 3 வயதில் சந்தோஷ் என்று இரு மகன்கள். இந்த நிலையில், சமீபத்தில் கோட்டையா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், வாழ்வாதாரம் இழந்து இரு மகன்களுடன் சாப்பாட்டுக்கே வழியின்றி வள்ளி கஷ்டப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், கணவரின் மரணம் அவரை மீளமுடியாத வேதனைக்கு ஆளாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. வள்ளி இந்த நிலையில், இன்று காலை 9 மணியளவில் மங்கம்மாபேட்டை பகுதியிலுள்ள ரயில் தண்டவாளப் பகுதிக்கு தனது இரு மகன்களையும் அழைத்துசென்ற வள்ளி, அரக்கோணத்தில் இருந்து திருப்பதி மார்க்கமாக சென்ற மின்சார ரயில் முன்பு பாய்ந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார். ரயிலில் சிக்கியதில் இரு பிள்ளைகளும் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தனர். தகவலறிந்ததும், அரக்கோணம் ரயில்வே போலீஸார் விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியையும், பெருந்துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/crime/mother-suicide-by-jumping-in-front-of-a-train-with-her-two-children-near-arakkonam




