சென்னை, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- கண்காணிப்பு அலுவலர்கள் கள ஆய்வு தமிழ்நாடு முதல்-அமைச்சர், பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணித்து உரிய மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மண்டல அளவில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் தங்களது மண்டலங்களில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை பணிகளை கள ஆய்வு செய்து, பணிகளை விரைவுப்படுத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் தூர்வாரும் பணி இதன் ஒரு பகுதியாக, இன்று (31.08.2026) தேனாம்பேட்டை மண்டல கண்காணிப்பு அலுவலர்/நில அளவை மற்றும் தீர்வாயத்தின் இயக்குநர் டி. கிறிஸ்துராஜ், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-122க்குட்பட்ட வெங்கட நாராயண சாலையில் உள்ள மாம்பலம் கால்வாயில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணி, வார்டு-117க்குட்பட்ட தியாகராய சாலையில் உள்ள மாம்பலம் கால்வாயில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணி, வார்டு-122க்குட்பட்ட நந்தனம் கால்வாயில் நீர் வெளியேறும் இடம், வார்டு-121க்குட்பட்ட சிவசாமி சாலை சந்திப்புப் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்களின் திசைமாற்றுப் பகுதி, வார்டு-116, டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் மழைநீர் வடிகால் வெளியேறும் இடம், லயோலா கல்லூரி அருகில் உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வண்டல்கள் தூர்வாரும் பணி, வார்டு-109க்குட்பட்ட நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள டிரஸ்ட்புரம் கால்வாயில் நீர் வெளியேறும் இடம், வார்டு-110க்குட்பட்ட நுங்கம்பாக்கம் மயானபூமியில் உள்ள நீர் வெளியேறும் இடம், வார்டு-112க்குட்பட்ட புலியூர் 2ஆவது பிரதான சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெருங்குடி மண்டல கண்காணிப்பு அலுவலர்/கலை மற்றும் கலாச்சாரத் துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட ரேடியல் சாலையில் உள்ள பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தின் கசிவுநீர் வெளியேறும் இடத்தில் குறுக்குக் கால்வாய் கட்டி நீர் வெளியேற்றப்படுவதையும், நாராயணபுரம் ஏரியில் நீர் வெளியேறும் இடம், வார்டு-191ல் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும், ரேடியல் சாலையில் உள்ள குழாய் பாலங்களின் கீழ் சதுப்பு நில நீர்வழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வண்டல்கள் தூர்வாரும் பணி, ரேடியல் சாலையில் உள்ள 17 மதகுகளின் முகப்புப் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி, எம்.ஜி.ஆர். சாலை சந்திப்பில் மாற்று வடிகால் அமைப்பது தொடர்பாகவும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வார்டு-191, ஜல்லடியான்பேட்டை, பெரிய ஏரியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, உபரிநீர் வெளியேறும் இடத்தில் மதகு அமைத்து நீரினை வெளியேற்றுவது குறித்து நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மழைநீர் வடிகால் கட்டும் பணி மணலி மண்டல கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மாநில திட்டக் குழு உறுப்பினர்/செயலர் பி.குமரவேல் பாண்டியன், மணலி மண்டலம், வார்டு-18க்குட்பட்ட ஆமுல்லவாயல் பாலத்தின் புழல் உபரிநீர் கால்வாய் மற்றும் மணலி விரைவுச் சாலையின் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோடம்பாக்கம் மண்டல கண்காணிப்பு அலுவலர்/நில நிர்வாக ஆணையரகத்தின் கூடுதல் ஆணையர் எஸ். கோபால சுந்தர ராஜ், கோடம்பாக்கம் மண்டலம், மாசி தெருவில் உள்ள விருகம்பாக்கம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி மற்றும் காளியம்மன் கோயில் தெருவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கட்டும் பணி ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் சோழிங்கநல்லூர் மண்டல கண்காணிப்பு அலுவலர்/அருங்காட்சியக இயக்குநர் டி. பாஸ்கர பாண்டியன், சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு.193, துரைப்பாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் மூடிய வடிகால் கட்டும் பணியினையும், ஆலந்தூர் மண்டல கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வாகே சங்கேத் பல்வந்த், ஆலந்தூர் மண்டலம், வார்டு-158, சென்னை வர்த்தக நிறுவனம் அருகில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்று வரும் விடுபட்ட மழைநீர் வடிகால் கட்டும் பணியினையும், ராயபுரம் மண்டல கண்காணிப்பு அலுவலர்/இயற்கை சூழல் மற்றும் பருவமநிலை மாற்றத்துறை இயக்குநர் ஆஷா அஜித், ராயபுரம் மண்டலம், வார்டு-57, யானைக் கவுனி பால கால்வாயினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபெற்று வரும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் ஆகியவற்றை பருவமழைக் காலத்திற்கு முன்னதாக முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். இந்த ஆய்வுகளின் போது, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-measures-in-chennai-zonal-monitoring-officers-conduct-inspections




