சென்னை, ஒரே இடத்தில் 5 ஆண்டுகளுக்குமேல்பணியாற்றுவோரைக் கணக்கெடுத்து பணியிட மாற்றம் செய்ய தவெக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் பணியாளர் மற்றும் சீர் திருத்தத்துறை சார்பில் அனைத்துத் துறைச் செயலர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: நிர்வாக அலுவலர், இளநிலை நிர்வாக அலுவலர், அலுவலகக் கண்காணிப் பாளர், உதவியாளர் ஆகிய பணியிடங்களில் உள்ள ஊழியர்கள், ஒரேஇடத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகவோ அல்லது 10 ஆண்டுகளுக்கு மேலாகவோ பணியாற்றி வருகிறார்களா என்ற முழு விவரங்களையும் சேகரித்து வரும் செப். 23ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். பதவி உயர்வில் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு, பின்னர் பழைய பணி இடத்துக்கே திரும்பி வந்தவர்கள் யார்?, அவர்கள் எப்போது திரும்பினார்கள்?, அதற்கானகாரணம் என்ன?என்ற விவரங்களையும் கட்டாயம் அறிக்கையில் சேர்க்க வேண்டும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது. மேலும், இது மிகவும் அவசரமானது என்றும் சுற்றறிக்கையில்அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி, பதவி உயர்வு வரும்போது ஊழியர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவது வழக்கம். ஆனால்,சிலர் பதவி உயர்வு பெற்று வேறு ஊருக்குச் சென்று சில நாள்களிலேயே, நிர்வாகக் காரணங் களைக் காட்டி அல்லது தற் காலிகப்பணிமாற்றம் மூலமாக மீண்டும் பழைய இடத்துக்கே திரும்பிவிடுகின்றனர். ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறி இத்தகைய உத்திகளைக் கையாண்டு பழைய இடத்திலேயே தொடர்ந்து நீடிக்கும் நபர்களையும் அரசு குறிவைத்துள்ளது. ஓர் அரசு ஊழியர் ஒரே இடத்தில், குறிப்பாகக் கணக்கு மற்றும் நிர்வாகப் பிரிவுகளில் பல ஆண்டுகள் தொடர்ந்து நீடித்தால் நிர்வாகத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. ஒரே இடத்தில் நீண்ட காலம் இருப்பதால் புதிய மாற்றங்கள் ஏற்படுவதில்லை. பொதுமக்கள்மற்றும் ஒப் பந்ததாரர்களுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு, முறைகேடுகள் மற்றும் ஊழல் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என அரசு கருதுகிறது. எனவே, 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றுவோர் பட்டியலை தயாரித்து உடனடியாக இடமாற்றம் செய்ய தவெக அரசு முடிவு செய்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-gave-a-shock-to-the-employees




