சென்னை, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24-ந்தேதி (இன்று) இரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது என மும்பை இந்திய ஹஜ் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் முடிந்தவுடன் 30-ந்தேதி காலை 11 மணிக்கு கணினி வழி குலுக்கல் தேர்வு நடைபெறும். இத்தேர்வு ( ஒளிபரப்பு செய்யப்படும். இதன் மூலம் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் விவரம் இந்திய ஹஜ் குழுவின் இணையதளத்தில் வெளியிடப்படுவதுடன், குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவிக்கப்படும். தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புனிதப் பயணிகள் ஒவ்வொருவரும் முதல் தவணையாக ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 300-ஐ அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் இந்திய ஹஜ் குழு தெரிவித்துள்ளது. மேற்கண்ட தகவல் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/hajj-pilgrimage-today-is-the-last-day-to-apply-online




