கொழும்பு, இந்தியா–இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ இடையே மைதானத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கொழும்பில் நடைபெற்ற போட்டியில், ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 53 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும். 17வது ஓவரின் கடைசி பந்தில், பெர்னாண்டோ வீசிய பந்தை ஆப் சைடில் அடிக்க முயன்ற ஜெய்ஸ்வால் போல்டானார். அதற்கு முன் அதே ஓவரில் ஜெய்ஸ்வால் பெர்னாண்டோவுக்கு எதிராக மூன்று பவுண்டரிகளை விளாசியிருந்தார். விக்கெட் வீழ்த்திய பெர்னாண்டோ உற்சாகமான கொண்டாடினார்.அதனால் ஜெய்ஸ்வால் திரும்பி அவரிடம் சென்றார். இருவரும் நேருக்கு நேர் நின்று வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்ட நிலையில், இரு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் உடனடியாக தலையிட்டு இருவரையும் சமாதானபடுத்தினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/jaiswal-and-asitha-fernando-clash-on-the-field




