சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- மக்களின் வெற்றி உங்கள் எழுச்சியும், உறுதியும், போராட்டமும் தான் திறமையற்ற, ஊழல் கறைபடிந்த, பொறுப்பற்ற மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை பதவி விலகச் செய்துள்ளது! இது இந்திய மக்களின் வெற்றி. கல்வி அமைப்பில் பொறுப்புணர்வையும், நீதி நிலைநாட்டலையும் கோரி போராடிய ஒவ்வொருவரின் வெற்றி. நீட் வினாத்தாள் கசிவு வெளிச்சத்துக்கு வந்த முதல் நாளிலிருந்தே, இந்திய தேசிய காங்கிரஸும், குறிப்பாக மாணவர்களின் குரலாக இடைவிடாது போராடிய ராகுல் காந்தியும், தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு, பொறுப்புக்கூறலைக் கோரி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தன. மன்னிப்பு கேட்க வேண்டும் ஆனால், எங்கள் போராட்டம் இத்துடன் முடிவடையவில்லை. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அமைதியான முறையில் தங்கள் உரிமைக்காக போராடிய மாணவர்கள் சந்தித்த கொடுமைகளுக்காக பிரதமர் நாட்டின் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதையும் தாண்டி, கல்வித் துறையில் அடிப்படை சீர்திருத்தங்கள் நடைபெறும் வரை, மாணவர்களுக்கு நீதியும் சமத்துவமும் கிடைக்கும் வரை, அவர்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற அழுத்தங்கள் குறைக்கப்படும் வரை, கல்வித் தரம் உயர்த்தப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும். வீர வணக்கம்! இந்த அரசை தலைகுனிய வைத்த இந்தியாவின் கோடிக்கணக்கான மாணவர்களுக்கு எனது வீர வணக்கம்! இந்தப் போராட்டத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை மாணவர்களின் உண்மையான, உறுதியான, அசைக்க முடியாத குரலாக இருந்த மக்கள் தலைவர் ராகுல் காந்திக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/dharmendra-pradhan-resignation-great-victory-of-indian-youth-manickam-thakur




