சென்னை, கர்நாடக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தைக்கூட்டி தண்ணீர் திறக்க மறுக்காமல் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு உடனடியாக காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- ஆணையம் உத்தரவு தமிழக விவசாயிகளின் உணர்வைப் புரிந்து அவர்களின் தேவையைக் கவனத்தில் கொண்டு தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருப்பது நியாயமானது. அதாவது காவிரியில் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு மொத்தம் 4 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்கனவே கொடுத்த உத்தரவின்படி தண்ணீர் திறக்க மறுத்து மேல்முறையீடு செய்த கர்நாடக அரசின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது கர்நாடக அரசின் நியாயமற்ற போக்கை வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழகத்திற்கான காவிரி நீர் தமிழக விவசாயிகளின் பயிர் தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் மிக மிக அவசரமானது மட்டுமல்ல அவசியமானதும் கூட. விவசாயம் பாதிப்பு ஏற்கனவே குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் தற்போதைய சம்பா சாகுபடிக்கு காவிரி நீர் உடனடி தேவையாக இருக்கிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு கடைபிடிக்க வேண்டுமே தவிர அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி ஒத்த கருத்து என்று கூறி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கக்கூடாது. எனவே தமிழக விவசாயிகள், கர்நாடக விவசாயிகள் எனப்பிரித்துப் பார்க்காமல் விவசாய வர்க்கம் என எண்ணி அவர்களைப் பாதுகாக்கக்கூடிய நிலையை கர்நாடக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தின் நியாயமான உரிமையை கர்நாடக அரசு கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். காவிரி நீரை திறந்துவிட வேண்டும் மேலும் நேற்றைய தினம் கர்நாடக அரசின் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது கர்நாடக அரசின் வீன்முயற்சியை, பின்னடவை வெளிப்படுத்தியுள்ளது. எனவே கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-government-should-release-cauvery-water-to-tamil-nadu-immediately-gk-vasan-insists




