லண்டன், முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்றடைந்தார். அவர், இன்று நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார். வரவேற்பு தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறை பயணமாக முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்று உள்ளார். அதற்காக அவர் நேற்று முன்தினம் (10-ந் தேதி) இரவு 10 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தில் புறப்பட்டார். துபாய் வழியாக லண்டன் சென்ற விஜய், நேற்று காலை 7 மணியளவில் லண்டன் ஹீத்ரோ விமான நிலை யத்தை சென்றடைந்தார். இது இந்திய நேரப்படி காலை 11.30 மணி ஆகும். விமான நிலை யத்தில் காத்திருந்த பிரிட்டன் தமிழ் சங்க தலைவர் ஜேக்கப் ரவிபாலன், த.வெ.க. துரைகண் ணன் மற்றும் பிரிட்டன் வாழ் தமிழர்கள் அவருக்கு பூங்கொத்துகள் வழங்கி உற்சாக வர வேற்பு அளித்தனர். அதனைத்தொடர்ந்து விஜய், 'ஷாங்க்ரி-லா தி ஷார்ட்' ஓட்டலுக்கு சென்றார். அங்குதான் அவர் தங்குகிறார். லண்டன் பிரிட்ஜ் பகுதியில் உள்ள புகழ்பெற்ற தி ஷார்ட் கட்டிடத்தில் இந்த ஓட்டல் அமைந்துள்ளது. கட்டிடத்தின் 34-வது தளம் முதல் 52-வது தளம் வரை ஓட்டல் செயல்படுகிறது. ஐரோப்பாவின் உயரமான கட்டிடங்களில் ஒன்றான 'தி ஷார்டில்' அமைந் துள்ளதால், ஓட்டலின் அறைகளில் இருந்து தேம்ஸ் நதி மற்றும் லண்டனின் நகரை பார்க்க முடியும். இந்த ஓட்டலில் 185 அறைகள், 14 டீலக்ஸ் அறைகள் மற்றும் 3 சிறப்பு எக்ஸ்கி யுட்வ் அறைகள் உள்ளன. மின்சார வாகனங்கள் தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதும், உயர்தர வேலைவாய்ப்புகளை உரு வாக்குவதுமே விஜய்யின் பிரிட்டன் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். மேம்பட்ட உற்பத்தி. மோட்டார் வாகனங்கள். மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முன்னணி தொழில் நிறுவ னங்களின் தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்களை விஜய் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். பிரிட்டன் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, இன்று புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்த யத் திடலுக்கு முதல்-அமைச்சர் விஜய் செல்கிறார். அங்கு நடைபெறும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை அவர் பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்தப் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கிறார். அவருடன் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி கார் பந்தய வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டி. இந்திய நேரப்படி இரவு 9.45 மணிக்கு தொடங்கி இரவு 11.45 மணிக்கு நிறைவடைகிறது. பந்தயச் சுற்றுப்பாதை தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்று விஜய் ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, இன்று விஜய், உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் உள்ள உள்கட்டமைப்பு. பந்தயச் சுற் றுப்பாதை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போட்டிகளை வணிக ரீதியாக நடத்தும் முறைகள் ஆகியவற்றை நேரில் பார்வையிடுகிறார். இந்தப் பயணத்தில் தமிழகத்துக்கான புதிய முதலீடு களை ஈர்ப்பதுடன், மோட்டார் ஸ்போர்ட்ஸ், விளையாட்டுச் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளையும் ஆராய உள்ளார். அதனைத்தொடர்ந்து அவர், நாளை பல்வேறு தொழில் அதிபர்களை சந்திக்க உள் ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/chief-minister-vijay-inaugurates-car-race-in-which-ajith-will-participate




