சென்னை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜர்124-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, நாளை மாலை 5.00 மணியளவில், சென்னை மெரினா கடற்கரையில் (விவேகானந்தர் இல்லம் அருகில்), உலகப்புகழ் பெற்ற மணற்சிற்பக் கலைஞரும் சுற்றுச்சூழல் பாதுகாவலருமான கஜேந்திரன் ஏழுமலையான், காமராஜரின் உருவத்துடன் கூடிய பிரம்மாண்ட மணற்சிற்பத்தை அமைக்கிறார். காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப. மாணிக்கம் தாகூர், எம்.பி., சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் டாக்டர் ஏ. செல்லகுமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, கே.எஸ்.அழகிரி, அகில இந்திய தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பிரவீன் சக்ரவர்த்தி, எம்.பி., நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் விஜய் வசந்த், எம்.பி, அகில இந்திய காங்கிரஸ் வார் ரூம் தலைவர் சசிகாந்த் செந்தில், எம்.பி., எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி, செல்வி. சுதா ராமகிருஷ்ணன் எம்.பி, மூத்த காங்கிரஸ் தலைவர் சா. பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர். மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் அமைச்சர் பெருமக்கள், முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் பார்வையிடுகின்ற வகையில் 13.07.2026 முதல் 19.07.2026 வரை தொடர்ந்து 6 நாட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/kamaraj-sand-sculpture-by-congress-in-marina-opening-tomorrow-evening




