திருச்சி, 'என்னால் கட்சியை நடத்த முடியாது, நான் தி.மு.க.விற்கு வந்து விடுகிறேன் என்று கூறியவர் துரை வைகோ' என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். உரிமை கிடையாது தி.மு.க. முதன்மை செயலாளரும். முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. பற்றி துரை வைகோ எம்.பி. கடுமையாக விமர்சனம் செய்து வருவதாக கூறுகிறார்கள். அவர் என்ன பேசினார் என எனக்கு தெரியாது. ஆனால் அவர் பிறப்பதற்கு முன் நடந்த மிசா பற்றி எல்லாம் பேசுகிறார். தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி பேசுவதற்கு துரை வைகோவிற்கு உரிமை கிடையாது. ‘எனது தந்தை கோபக்காரர். கட்சிக்கு வளர்ச்சி இல்லை. என்னால் கட்சியை நடத்த முடியாது. நான் தி.மு.க.விற்கு வந்து விடுகிறேன்' என என்னிடம் கூறியவர் தான் துரை வைகோ. அவர் சிறுபிள்ளையாக இருந்து கொண்டு அதிகமாக பேசுவதற்கு எல்லாம் நான் பதில் அளிக்க முடியாது. மறைமுக உறவு பா.ஜனதாவுடன் தி.மு.க. மறைமுக கூட்டணியில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை. தி.மு.க. சனாதனத்திற்கு எதிராகவும், சமூக நீதிக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறது. பா.ஜனதாவின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை தி.மு.க. கடுமையாக எதிர்த்து வருகிறது. பா.ஜனதா கொள்கையை தி.மு.க. ஒருபோதும் ஏற்றது இல்லை. த.வெ.க. கூட்டணியில் இருப்பவர்கள் தான் உண்மையில் பா.ஜனதாவுடன் மறைமுக உறவில் உள்ளனர். த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக தருவோம் என்றார்கள். ஆனால் ரூ.1,000 மின் கட்டணம் செலுத்தியவர்கள் இந்த ஆட்சியில் ரூ.5 ஆயிரம் முதல் 37 ஆயிரம் வரை கட்ட வேண்டிய நிலை உள்ளது. கிராமங்களில் தொடர் மின்வெட்டு இருப்ப தால் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயத்திற்கு மும் முனை மின்சாரம் வழங்கப்படாததால் விவசாயிகளும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/durai-vaiko-who-said-he-would-join-the-dmk-kn-nehru-interview




