சென்னை, ஜனநாயகனை கொண்டாடுவோம். பொறுப்புள்ள நாயகனாக மாறுவோம்! "ஜனநாயகன் பாஸ்போர்ட்" மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கினார் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ். ஜனநாயகன் பாஸ்போர்ட் முதல்-அமைச்சர் விஜய் நடித்துள்ள "ஜனநாயகன்" திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, திரைப்பட கொண்டாட்டத்தை சமூக பொறுப்புணர்வுடன் இணைக்கும் வகையில், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் "ஜனநாயகன் பாஸ்போர்ட்" என்ற மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கினார். சமூகப்பொறுப்பு "ஜனநாயகனைக் கொண்டாடுவோம். பொறுப்புள்ள நாயகனாக மாறுவோம்!" என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், திரைப்படத்தை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல், அதன் மூலம் சமூகத்தில் ஒவ்வொரு குடிமகனும் தனது ஜனநாயக மற்றும் சமூகப் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக ஒற்றுமை இந்த "ஜனநாயகன் பாஸ்போர்ட்" மூலம் சாலை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மையான சூழல், மனிதநேயம், சட்டங்களை மதித்தல், பொது இடங்களை பாதுகாத்தல், சமூக ஒற்றுமை உள்ளிட்ட பொறுப்புமிக்க குடிமகனின் அடிப்படை கடமைகள் குறித்து உறுதிமொழி எடுக்க மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். உறுதிமொழி ஏற்றனர் திரையில் ஜனநாயகன். சமூகத்தில் பொறுப்புள்ள நாயகன்" என்ற சிந்தனையை மக்களிடம் கொண்டு சேர்த்து, பொறுப்புணர்வும் சமூக அக்கறையும் கொண்ட குடிமக்களை உருவாக்குவதே இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கமாகும். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திரைப்பட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்று, பொறுப்புள்ள குடிமகனாக செயல்பட உறுதிமொழி ஏற்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/lets-celebrate-the-democrat-lets-become-responsible-heroes-kanimozhi-speech




