ஈரோடு, பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று கூறி வாலிபரிடம் ரூ.7.50 லட்சம் மோசடி செய்த மர்மநபர்களை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு அத்தப்பம்பாளையத்தை சேர்ந்த 35 வயது வாலிபரை சமூகவலைதளம் மூலமாக பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என்று ஆசை வார்த்தை கூறினார். அவர் கூறியதைபோல ஒரு செயலியை பதிவிறக்கம் செய்த வாலிபர், அதில் ரூ.10 ஆயிரத்தை முதலீடு செய்தார். அப்போது லாபத்துடன் சேர்த்து பணம் திரும்ப வந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த வாலிபர், கடந்த மாதம் 1-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை மொத்தம் ரூ.7 லட்சத்து 95 ஆயிரத்தை முதலீடு செய்து உள்ளார். ஆனால் அதில் அவருக்கு ரூ.45 ஆயிரம் மட்டுமே திரும்ப கிடைத்தது. மீதமுள்ள தொகை கிடைக்கவில்லை. தொடர்ந்து அவர் அந்த செயலியை பயன்படுத்தியபோது, திடீரென அது செயலிழந்தது. அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர் ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-cheated-of-rs-7-5-lakh-in-share-market-investment-scam




