தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் - 4, தக்காளி - 3, பச்சை மிளகாய் - 2, கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், கடலை மாவு - 1 டீஸ்பூன், கடுகு - ½ டீஸ்ப்பூன், சோம்புத் தூள் - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ¼ டீஸ்பூன், மல்லித்தூள் - ¼ டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - தேவையான அளவு. செய்முறை: தக்காளி, பெரிய வெங்காயம், கொத்தமல்லித்தழை மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்கவும். பின்னர் கடலைப்பருப்பை சேர்த்து லேசாக வறுத்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சோம்புத் தூளை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து நன்றாக கொதிக்கவிடவும். காய்கறிகள் நன்றாக வெந்ததும், கடலை மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து கட்டி இல்லாமல் கலந்து, குழம்பில் ஊற்றி கிளறவும். மீண்டும் 2–3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, குழம்பு சற்று கெட்டியான பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவி சூடாக பரிமாறவும். கோயம்புத்தூர் ஸ்பெஷல் பச்சைப்பயிறு குழம்பு - சத்தும் சுவையும் நிறைந்த பாரம்பரிய ரெசிபி! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/ampstories/photo-story/an-excellent-onion-kurma-for-dosa




