சென்னை, டாஸ்மாக் தமிழகத்தில் தற்போது 4.048 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறுகிறது. இந்த கடைகளில் விஸ்கி, பிராந்தி, வோட்கா, ரம் போன்ற இந்திய தயாரிப்பு வெளிநாட்டு வகை மதுபானங்கள், பீர், ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மதுபான விலை உயர்வு இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, சாதாரண மற்றும் நடுத்தர வகை வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் பீர் உள்ளிட்டவற்றின் விலையை ரூ.10 முதல் ரூ.50 வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இது அண்மையில் நடந்த டாஸ்மாக் நிர்வாகத்தின் வாரிய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. மேலும் எவ்வளவு உயர்த்த வேண்டும் என்ற உயர்வின் அளவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தமிழகத்தில் கடைசியாக கடந்த 2024 பிப்ரவரி 1-ம் தேதி மதுபான விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கூடுதல் கட்டணம் இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றவுடன், இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் பீர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பெட்டிக்கும் கூடுதல் கட்டணம் நிர்னயித்தது. இதனால் உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாகக் கூறி, மதுபான ஆலை மற்றும் பீர் உற்பத்தியாளர்கள் சில்லறை விலையை உயர்த்துமாறு அரசிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதை அரசு உடனடியாக ஏற்கவில்லை என்றாலும், இந்த விவகாரம் டாஸ்மாக் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இன்று அல்லது நாளை. எதிர்காலத்தில் டாஸ்மாக் சில்லறை மதுபான விற்பனையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் வாய்ப்பு குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், இதற்கு நிதித்துறை ஆதரவு அளிக்கவில்லை. தனியாருக்கு விற்பனை உரிமை வழங்கப்பட்டால், மாநில அரசின் மதுபான வருவாய் பாதிக்கப்படும் என நிதித்துறை தரப்பில் முன்வைக்கப்பட்டது. இந்த விலை உயர்வு குறித்து இன்று அல்லது நாளை மீண்டும் உயர்மட்ட ஆலோசனை நடத்தி அறிவிப்பு வெளியிடப்படலாம். அடுத்த வாரத்தில் புதிய விலை அமல்படுத்தப்படலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/will-liquor-prices-increase-in-tamil-nadu-announcement-today-or-tomorrow




