Volledig artikel
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு தொடர்ந்திருந்த அவதூறு வழக்கு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அண்ணாமலை வெளியிட்ட 'திமுக பைல்ஸ்' என்ற வீடியோவில், திமுக தலைவர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில், டி.ஆர். பாலு சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். அண்ணாமலை - டி.ஆர் பாலு தன் மீது அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பவை என்றும் கூறி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர். பாலு அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இத்தனை மாதங்களாக நீதிமன்றத்தில் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகள் நடந்து வந்த நிலையில், தற்போது இந்த அவதூறு வழக்கை டி.ஆர். பாலு நீதிமன்றத்தில் இருந்து முழுமையாக வாபஸ் பெற்றிருக்கிறார். ‘விஜய் Vs உதய்’ போட்டியில் இதுவரை வென்றது யார்? அண்ணாமலை கட்சி தொடங்கினால் இந்த நிலை மாறுமா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel — zie link hieronder



