சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- முறையாக வரன்முறை செய்யப்படாத பகுதிகளில் 1.1.2011-க்கு முன்பு கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 5-ந்தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பு அடுத்த ஆண்டு (2027) ஜூலை 5-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்து இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/another-opportunity-to-regularize-unauthorized-educational-institution-buildings-tamil-nadu-government-announcement




