திருவொற்றியூர், சென்னை திருவொற்றியூரில் 10-ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத போலி சித்த மருத்துவரை போலீசார் கைது செய்தனர். போலி சித்த மருத்துவர் சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை சேஷாசல கிராமணி தெருவில் அகத்தீஸ்வரர் பஞ்சகர்மா என்ற பெயரில் சித்த மருத்துவம் பார்த்து வந்தவர் சஜிகுமார் (வயது 59). இவர் போலியாக சித்த மருத்துவ தொழில் செய்து வருவதாக மருத்துவ மற்றும் ஊரக நலப் பணித்துறைக்கு தகவல் கிடைத்தது. கைது அதன்பேரில் அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவர் 10-ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத போலி சித்த மருத்துவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சஜிகுமாரை திருவொற்றியூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/fake-siddha-doctor-arrested-in-thiruvotriyur



