மதுரை, திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வந்த FQL இன்வெஸ்ட்மெண்ட் என்ற தனியார் நிதி நிறுவனம், முதலீடு செய்யும் பணத்தை 45 முதல் 65 நாட்களில் இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுள்ளது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், திடீரென அந்நிறுவனத்தின் ஆப் முடங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து தங்களுடைய பணத்தை மீட்டு தருமாறு சுமார் 40 ஆயிரம் பேர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர், இந்த புகாரின் அடிப்படையில் எப்.க்யூ.எல் நிறுவனத்தில் ஏஜெண்டுகளாக செயல்பட்டதாக 20 பேர் வரை கைது செய்யப்பட்டு அவர்களை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றபட்டுள்ளது - எஃப்.க்யூ.எல் வழக்கு இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 7-க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான ரஞ்சித் மற்றும் பிரியதர்ஷினி மற்றும் அருண் ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று ரஞ்சித் அவருடைய மனைவி பிரியதர்ஷினி ஆகியோர் நேற்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து மதுரையில் இருந்து வந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் விசாரணைக்காக மதுரைக்கு அழைத்துச் சென்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/corruption/fql-investment-fraud-key-accused-surrender-economic-offences-wing-intensifies-investigation




