தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக அரசு 2026 - 2027 ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் சார்பில், நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் பள்ளி மற்றும் உயர்கல்வித்துறைக்கான அறிவிப்புகள் என்னென்ன? என்பதைப் பார்ப்போம். * சூப்பர் க்ளீன் - சூப்பர் கேம்பஸ் திட்டம் மூலம் பள்ளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். TN Budget 2026 * முதல்கட்டமாக 10 ஆயிரம் பள்ளிகளில் சூப்பர் க்ளீன் - சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படும். * சூப்பர் க்ளீன் - சூப்பர் கேம்பஸ் திட்டத்திற்கு ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * 9-12 வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லாமல் சீருடை, புத்தகம் வழங்க ரூ.122 கோடி ஒதுக்கீடு. * 5 லட்சம் மாணவர்களுக்கான ஸ்மார்ட் சைக்கிள் திட்டத்திற்கு ரூ.277 கோடி ஒதுக்கீடு. * 3,734 பள்ளிகளை ரூ.2,132 கோடியில் நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. * தரமான கல்வி வழங்க காமராஜர் பெயரில் நவீன உண்டு, உறைவிட வசதிகளுடன் சிறப்பு பள்ளிகள் அமைக்கப்படும். * மாணவர் தங்குமிட வசதியை மேம்படுத்த ரூ.10 கோடி மூலதனம். * ரூ.2000 கோடியில் கல்லூரி மாணாக்கருக்கு வெற்றி மடிக்கணினி திட்டத்திற்கு ஒதுக்கீடு. * அரசு நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மறுவடிவமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு. * பள்ளிப் பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டு கற்றல் வெளிப்பாடுகளில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உருவாக்கப்படும். இதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். * பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் 6-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். TN Budget 2026 * 2031ஆம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும். * அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் SSC, RRB, IBPS போட்டித் தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகள் அமைக்கப்படும். இதற்காக ரூ.3.38 கோடி நிதி ஒதுக்கீடு. * ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதை நோக்கமாக கொண்டு மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் உருவாக்கப்படும், ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு. இந்தப் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44, 527 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடியும் தவெக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/tn-budget-2026-annoannouncement-for-school-and-higher-education-departments




