ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மையப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள சாகுல் என்பவருடைய அரிசி ஆலையில் அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மனைவி சந்திரா (வயது 40) வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள். 2 மகன்கள் உள்ளனர். சந்திரா இந்த நிலையில் நேற்று சந்திரா அரிசி ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென எந்திரத்தில் சேலை சிக்கியது. இதில் தலை மற்றும் உடலில் படுகாயம் அடைந்த சந்திராவை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சந்திரா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போலீஸ் விசாரணை இதுகுறித்து சந்திராவின் கணவர் ரவி கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரிசி ஆலை எந்திரத்தில் பெண் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/female-worker-dies-after-saree-gets-caught-in-rice-mill-machinery



