நேற்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருது விழா நடைபெற்றது. அந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது. "திமுக கூட்டணியில் இருந்தபோது, அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அம்பேத்கரின் நூலை வெளியிட்ட போது நான் எங்கு இருந்தாலும் எனது உள்ளம் அங்கேயே இருக்கும் என்று குறிப்பிட்டார். தேர்தலுக்கு முன்பே எத்தனையோ ஆசை வார்த்தைகள் வந்தபோதும், 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பலவீனப்பட ஒருபோதும் இடம் தர மாட்டேன்' என்பதில் உறுதியாக இருந்தேன். ஸ்டாலின், திருமாவளவன்'அதிமுகவினரை தவெகவில் இணைப்போம் என்று சொல்வது அறமா? அவர்களிடமே கேளுங்கள்' - திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் முன்பே திமுக தலைமைக்குத் தகவல் கொடுத்தேன். அமைச்சரவையில் நானே சேரலாம் என்று ரவிக்குமார் போன்றோர் சொன்னபோதும், 30 ஆண்டு காலம் உழைத்த தம்பி வன்னி அரசு போன்றவர்கள் அந்த நாற்காலியில் அமர வேண்டும் என்று பெருந்தன்மையுடன் நடந்துகொண்டேன். முதலமைச்சரைச் சந்தித்தபோது, மதச்சார்பற்ற சக்திகளை அவர் அழைத்திருப்பது துணிச்சலான முடிவு என்று பாராட்டினேன். திமுக-வே எங்களுடன் உறவில்லை என்று அறிவித்ததே தவிர, நான் அந்த நட்பை ஒருபோதும் சிதைக்கவில்லை. அரசியல் வேறு, தனிநபர் நட்பு வேறு. தமிழிசை, பொன்னார், அண்ணாமலை, அன்புமணி என யாராக இருந்தாலும் மரியாதை கொடுப்பது எனது பண்பு. டெல்லி அரசியலைப் போல தமிழகத்திலும் அரசியல் நாகரிகத்தை முன்னெடுத்தவன் நான்". 'அதானி வழக்கை ஓராண்டிற்கு முன்பே தள்ளுபடி செய்திருக்க வேண்டும்' - அமெரிக்க நீதித்துறை விளக்கம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/thirumavalavan-recalls-dmk-ties-defends-political-stand




