புதுடெல்லி, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், ஆங்கில மொழியில் புலமை கொண்டவராகவும், ஆளுமை மிகுந்த ஆங்கில பேச்சாளராகவும் அறியப்படுகிறார். இந்நிலையில், பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் இலக்கணப் பிழை இருந்ததை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரது 76-வது பிறந்தநாளில் அன்பான வாழ்த்துகள். அவரது பிறந்தநாள் இனிமையாக அமையவும், வரவிருக்கும் ஆண்டு ஆரோக்கியமானதாகவும், நிறைவானதாகவும் திகழவும் வாழ்த்துகிறேன். நமது அன்பிற்குரிய நாட்டிற்கு அவர் தொடர்ந்து பொது சேவை ஆற்ற இந்த நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவை அவர் ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தார். அதில் ‘on' என்ற வார்த்தைக்கு பதிலாக 'in' என்ற வார்த்தையை தவறுதலாக சசி தரூர் பயன்படுத்தியிருந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள், அவர் செய்த இலக்கணப் பிழை குறித்து நகைச்சுவையாக கமெண்ட்டுகளை பதிவிட்டனர். ‘சசி தரூர் இலக்கணப் பிழை செய்துவிட்டார். அது தட்டச்சு செய்யும்போது ஏற்பட்ட பிழையாக இருக்கலாம்’ என்று ஒருவர் பதிவிட்டிருந்தார். மற்றொரு நபரோ, ‘இதனை பிரேம் போட்டு அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும்’ என்று கிண்டலாக கூறியிருந்தார். ‘உங்கள் வார்த்தைகள் எவ்வளவு கவனமாக கண்காணிக்கப்படுகிறது என்பதைப் பாருங்கள்’ என்று ஒரு நபரும், ‘சசி தரூரே தவறு செய்கிறார் என்பது கொஞ்சம் ஆறுதலாக உள்ளது’ என்று மற்றொரு நபரும் பதிவுகளை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், நெட்டிசன்களின் கருத்துகளை ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொண்டு அதற்கு சசி தரூர் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆமாம். பிரதமரின் பிறந்தநாளில் ‘on' என்பது 'in' ஆகிவிட்டது. இது எல்லா நேரத்திலும் நடக்கக் கூடியதுதான்” என்று பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/grammatical-error-in-a-congratulatory-message-to-the-prime-minister-congress-mp-shashi-tharoors-reply-to-netizens-who-pointed-it-out




