Volledig artikel
மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மம்தாவும் அவரது கட்சியும் நாளுக்கு நாள் சரிவைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியைப் பாராட்டி பேசியிருக்கிறார். மம்தா பானர்ஜி தனியார் ஊடகத்திற்குப் பேட்டிஅளித்திருக்கும் அவர், "தங்களின் அரசியல் பாதைகள் வேறுபட்டிருந்தாலும், தனிப்பட்ட முறையில், சுவேந்து அதிகாரியுடன் எனக்கு மிகவும் நல்ல நட்பு இருந்துள்ளது. நாங்கள் இருவரும் திரிணாமுல் காங்கிரஸில் ஒன்றாக இருந்தபோது, அவர் எனக்கு மிகவும் ஆதரவளித்தார். குறிப்பாக, 2014-இல் எனக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அது கிடைக்கவில்லை. நான் இரவு முழுவதும் அழுதேன். அப்போது, சுவேந்து எனக்கு ஆறுதல் கூறினார். அதேபோல், நான் முதன்முதலில் கரீம்பூரில் போட்டியிட்டபோது, எனக்காகப் பிரசாரம் செய்ய யாரும் வரவில்லை. மஹுவா மொய்த்ரா ஆனால் எனது முதல் பேரணியை சுவேந்து அதிகாரிதான் நடத்தினார். இருப்பினும் சுவேந்து இன்று வேறு கட்சிக்குச் சென்றுவிட்டார். அதனால், நாங்கள் இப்போது பேசிக்கொள்வதில்லை. ஆனால், அவர் எனக்கு செய்த உதவியை என்னால் மறக்க முடியாது” என்று பேசியிருக்கிறார். கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கிய அதிருப்தி கோஷ்டி; உச்சகட்ட சிக்கலில் மம்தா! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel — zie link hieronder



