புதுடெல்லி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது. ஆசிய விளையாட்டு ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கின. 45 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டிகள் அக்டோபர் 4-ந் தேதி வரை நடைபெறுகின்றன. பதக்க வேட்டை இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது. மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் உள்ளிட்ட சோனம் மாஸ்கர் மற்றும் விதார்ஷா வினோத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியதன் மூலம் நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது. எம்.எம்.ஏ இதனிடையே, மகளிருக்கான 'டிரடிஷனல் 60 கிலோ எம்.எம்.ஏ.' பிரிவிலும் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. இந்தியாவின் சுச்சிகா தரியால் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். காலிறுதிப் போட்டியில் அவர் மங்கோலியாவின் அல்டன்சிமேக் பைகல்மாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/othersports/asian-games-2026-india-secure-silver-in-womens-10m-air-rifle-team-event




