சென்னை, சென்னை தூய்மை பணியாளர்களுக்கான உணவுப்படி திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 24 ஆயிரத்து 264 தூய்மைப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த உணவிற்குப் பதிலாக, நாளொன்றுக்கு உணவுப்படியாக ரூ 50 வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக 44 கோடியே 28 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தரமான, தங்களுக்குப் பிடித்த உணவை, தங்களுக்குத் தேவையான நேரத்தில் தூய்மைப் பணியாளர்கள் உண்ண முடியும். எனவே, இது வரவேற்பிற்குரியது. இத்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சிகளுக்கும் விரிவுபடுத்திட வேண்டும். வலியுறுத்தல் இந்த உணவுப்படித் தொகையை ரூ 50 லிருந்து ரூ 100 ஆக உயர்த்தி வழங்குவதோடு, மருத்துவ விடுப்பு மற்றும் பேறுகால விடுப்பில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கும் வழங்கிட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-sanitation-workers-food-allowance-scheme-should-be-expanded-across-tamil-nadu-m-veerapandian




