சென்னை, உலக நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்துதல், வன்முறையை குறைத்தல் மற்றும் போர்களை தவிர்த்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக உள்ளிட்ட நோக்கங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21-ந்தேதி ‘சர்வதேச அமைதி தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உலக அமைதியை வலியுறுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச அமைதி தினத்தில் நம் மனதில் தொடங்கும் அமைதி உலகம் முழுவதும் பரவட்டும் என காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “சர்வதேச அமைதி தினம் (International Day of Peace) நல்வாழ்த்துகள்! உலகெங்கும் அன்பும், மனிதநேயமும், சமாதானமும் நிறைந்திருக்க வேண்டும் என்பதே இந்த நாளின் மிக முக்கிய நோக்கமாகும். வன்முறையற்ற, போர்கள் இல்லாத ஒரு அமைதியான உலகத்தை உருவாக்க நாம் அனைவரும் கைகோர்ப்போம். விட்டுக்கொடுத்தல், பரஸ்பர மரியாதை மற்றும் அன்பின் மூலமாகவே நிரந்தர அமைதியைச் சாத்தியமாக்க முடியும். நம் மனதில் தொடங்கும் அமைதி, உலகம் முழுவதும் பரவட்டும்!” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/international-day-of-peace-selvaperunthagais-greetings




