லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உலகப்புகழ்பெற்ற இந்து மதக்கடவுள் ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கடவுள் ராமரை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், கோவிலுக்கு நன்கொடையாகவும், காணிக்கையாகவும் தினமும் லட்சக்கணக்கான ரூபாய், தங்கம், வெள்ளி நகைகளை பக்தர்கள் வழங்குகின்றனர். இந்த நன்கொடை, காணிக்கை மற்றும் வரவு, செலவை ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இதனிடையே, ராமர் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கை பணத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. கோவிலில் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டவர்களில் 8 பேர் காணிக்கை, நன்கொடை பணத்தை திருடியுள்ளனர். மேலும், அந்த பணத்தை தங்கள் வங்கி கணக்குகளுக்கு செலுத்தியும், உறவினர்களுக்கு கொடுத்தும் உள்ளனர். திருடிய பணத்தை கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உத்தரபிரதேச அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரித்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் 3 கோடி ரூபாய் வரை காணிக்கை பணத்தில் திருடப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கைது செய்யப்படவர்களின் வீடுகளில் இருந்து லட்சக்கணக்கில் பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதான 8 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் இன்று காணொலி காட்சி வாயிலாக அயோத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவர்களின் நீதிமன்ற காவலை 14 நாட்கள் நீட்டிக்க உத்தரவிட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/judicial-custody-extended-for-8-people-arrested-in-the-ram-temple-donation-irregularities-case




