சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தபால்துறை சார்பில் வாடிக்கையாளர்களின் தபால்துறை தொடர்பான கருத்துகளை தெரிவிக்கும் வகையில் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 11,745 தபால் நிலையங்களில் சேவை பெறும் அனைத்து வாடிக்கையாளர்களும் பங்கேற்கலாம். தக் அதாலத் சென்னையில் உள்ள தலைமை தபால்துறை அதிகாரி அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ள, இந்த முகாமில் தபால்துறை சேவைகளின் தரம் மற்றும் வாடிக்கையாளர்களின் சேவைகளை சிறப்பாக மேம்படுத்துவது குறித்த தங்கள் கருத்துகளை தபால்துறை குறைதீர்ப்பு முகாம் தலைப்புடன் சுந்தரேஸ்வரி, உதவி இயக்குநர், முதன்மை தபால்துறை தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை -600002 என்ற முகவரிக்கு 18.09.2026 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்பலாம். மின்னஞ்சல் மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துக்களை தக் அதாலத் என்ற தலைப்புடன் pg.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-postal-department-customer-grievance-camp




