சென்னை, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் மீது ஏவிவிடப்பட்டிருக்கும் இந்த சோதனை கடும் கண்டனத்துக்குரியது என திவ்யா சத்யராஜ் பதிவிட்டுள்ளார். அன்பில் மகேஸ் வீட்டில் போலீசார் சோதனை முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அன்பில் மகேஸ் வீட்டில் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். திவ்யா சத்யராஜ் கடும் கண்டனம் இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சோதனை நடைபெற்று வரும் நிலையில் சத்யராஜின் மகளும், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளருமான திவ்யா சத்யராஜ் தனது கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- "தொடர் மின்வெட்டு, லண்டன் ஏமாற்று வேலை, விலைவாசி உயர்வு, பட்டினப்பாக்கம் மக்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம், டெண்டர் ஊழல் புகார்கள் என தொடர்ச்சியாக மக்களிடம் அடிவாங்குவதால் அதை திசைதிருப்புவதற்கு மீண்டும் ரெய்டு எனும் ஆயுதத்தைப் பிரயோகிக்கிறது தவெக அரசு. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் மீது ஏவிவிடப்பட்டிருக்கும் இந்த சோதனை கடும் கண்டனத்துக்குரியது. அவரும் கழகமும் இதனை சட்டரீதியாக எதிர்கொண்டு வெல்வோம். திமுக இதுபோன்ற மிரட்டல்களுக்கு அஞ்சாது என்பதை 77 வருடங்களாகப் பார்த்தும் இன்னும் திருந்தவில்லை என்றால், திருத்தப்படுவீர்கள்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/raid-at-anbil-maheshs-house-divya-sathyaraj-releases-a-sensational-post




