சபரிமலை, கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முக்கிய பூஜைகளை கேரள மாநிலம் செங்கனூர் பகுதியை சேர்ந்த தாழமண் தந்திரி குடும்பத்தை சேர்ந்தவர்களே நடத்தி வருகின்றனர். சபரிமலை அய்யப்பன் கோவில் குறித்த அனைத்து முக்கிய முடிவுகளையும் தாழமண் தந்திரி குடும்பத்தினர் தான் எடுப்பார்கள். திருவிதாங்கூர் தேவஸ்தானம் இந்தநிலையில், சபரிமலையின் புதிய தந்திரியாக காந்தரரு பிரம்மதத்தனை திருவிதாங்கூர் தேவஸ்தானம் நியமித்துள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் அவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலின் தந்திரியாக (தலைமை அர்ச்சகர்) கந்தரரு ராஜீவருக்குப் பிறகு கண்டரரு பிரம்மதத்தன் பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தானம் வாரியத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வாரியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதிய தந்திரி நியமனம் ஆண்டு தோறும் மலையாள மாதமான சிங்க மாதம் (தமிழில் ஆவணி மாதம்) தொடக்கத்தில் தான் தந்திரி பதவி மாற்றம் நடைபெறும். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான் சிங்க மாதம் தொடங்குகிறது. தாழமண் மடத்தைச் சேர்ந்த பிரம்மதத்தன், தாந்திரீக சடங்குகளின்படி மலையாள மாதமான சிங்கம் மாதத்தின் முதல் நாளில் பொறுப்பேற்பார். சபரிமலை அய்யப்பன் கோவிலில் மூத்த தந்திரியாக இருப்பவர் காந்தரரு ராஜீவரர். கடந்த சில மாதங்களுக்கு முன் சபரிமலையில் தங்கம் திருட்டு தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இவர் ஜாமீனில் உள்ளார். உடல்நலக் குறைபாடுகளைக் காரணம் காட்டி, சபரிமலையில் தனது பணிகளிலிருந்து விடுவிக்கக் கோரி ராஜீவரு சமீபத்தில் தேவஸ்தானம் வாரியத்திற்கு கடிதம் எழுதியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/kandararu-brahmadatta-appointed-as-new-thantri-of-sabarimala




