ஆம்ஸ்டெல்வீன் உலகக்கோப்பை பெண்கள் ஆக்கி போட்டியில் ஜெர்மனியை 3-1 கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. 2026-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை பெண்கள் ஆக்கி போட்டியில் நேற்று 5-வது இடத்துக்கான ஆட்டம் நடந்தது. நெதர்லாந்தில் ஆம்ஸ்டெல்வீன் நகரில் வாக்னர் ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்தியாவும், தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் முன்னாள் சாம்பியனான ஜெர்மனியும் விளையாடின. இந்திய அணி அதிரடி இதில், முதல் பாதியில் கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. 2-வது பாதியில் இந்திய அணி அதிரடியாக விளையாடியது. இஷிகா சவுத்ரி 43-வது நிமிடத்தில் முதல் கோலை போட்டு, அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார். இதன்பின்பு, 44-வது நிமிடத்தில் நவ்னீத் கவுர் 2-வது கோலையும், 47-வது நிமிடத்தில் 3-வது கோலையும் போட்டு 3-0 என இந்தியாவை வெற்றியை நோக்கி கொண்டு சென்றார். ஜெர்மனியின் லின் கிரிங்ஸ் 59-வது நிமிடத்தில் ஒரு கோலை போட்டார். எனினும், போட்டி முடிவில் 3-1 என ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதனால், உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு 5-வது இடத்திற்கான ஆட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/hockey/womens-hockey-world-cup-india-beat-germany-3-1




