சிவகார்த்திகேயன் படத்தில் சீமான் 'தாய்க்கிழவி' படத்தை இயக்கி கவனம் ஈர்த்த சிவகுமார் முருகேசன் தற்போது 'சேயோன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும், பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். கமல்ஹாசன் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'சேயோன்' படத்தில் சீமானின் தோற்றம் அவரது கதாபாத்திரத்தின் தோற்றத்தை படக்குழு நேற்று வெளியிட்டது. சீமானின் தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'எல்.ஐ.கே.' படத்துக்கு பிறகு சீமான் நடிக்கும் படம் இதுவாகும். வைரலாகும் புகைப்படங்கள் மதுரை மண்ணின் பாரம்பரியப் பின்னணியைக் கொண்ட ஒரு பக்கா கிராமத்து கமர்சியல் எண்டர்டெய்னராக இப்படம் உருவாகி வருகிறது. தற்போது மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக பிரமாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு, முக்கிய ஆக்சன் மற்றும் குடும்பக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ‘சேயோன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் சீமானின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதில், சீமான் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actor-seeman-at-the-seyon-shooting-spot-photos-go-viral



