லாகூர், பாகிஸ்தானில் கடந்த மாதம் முதல் பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம், லாகூர் உள்பட பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கனமழை, வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 109 பேர் பலி இந்நிலையில், பாகிஸ்தானில் கடந்த மாதம் முதல் பெய்து வரும் பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், வீடுகள் இடிந்து விபத்து உள்பட பல்வேறு இயற்கை பேரிடர்களில் சிக்கி இதுவரை 109 பேர் உயிரிழந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/heavy-rain-floods-in-pakistan-109-killed




