சென்னை, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்ப டும் மதிய உணவில் மாண வர்களுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் திடீரென நிறுத்தப்பட்டதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ்பள்ளிமாணவர்களுக்கு வாரத்தின் அனைத்து 5 வேலை நாட்களிலும் மாணவர்களுக்கு முட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று நாமக்கல், ஈரோடு, சேலம், திருநெல்வேலி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் நேற்று அன்று வழங்கப்பட்ட மதிய உணவில் முட்டைகள் வழங்கப்படவில்லை. இதனால் மாண வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதே சமயம் திருப்பூர், மயிலாடுதுறை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு முட்டைகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும் போது, கடந்த பத்தாண்டுகளில் இதுபோன்ற ஒருகுறைபாட்டைதாங்கள் கண்டதில்லை. மேலும் காலாண்டுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், பள்ளிகளின் செயல்பாடு குறித்த தகவல் தொடர்பில் ஏற் ட்ட குழப்பத்தால் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் முட்டைகளின் தேவை குறித்த தகவல் பரிமாற்றக் குறைபாடு காரணமாக, சில மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் விநியோகஸ்தர்களுக்கு தகவல் அனுப்பத்தவறியதால் இந்த குளறுபடி ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். கடந்த 15 ஆண்டுகளில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இதுதான் முதல் முறை என சத்துணவுப் பணியாளர்கள் கூறினர்.இதற்கிடையில், தமிழ்நாடு உயர் மற்றும் மேல்தி லைப்பள்ளிபட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.மலைக்கொழுந்தன் கூறியதாவது, இந்தக் குறைபாடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளோம்., மாநிலம் முழுவதும் இத்திட்டம் சீராகச் செயல்படுத்தப்பட்ட போதிலும், சில மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு முட்டைகள் வழங்கப்பட்டதாகவும், மற்ற மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த குறைபாட்டிற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மதிய உணவுத் திட்டத்தின் கீழ் முட்டைகள் தடையின்றி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் நாட்களில் தடங்கலின்றி முட்டை விநியோகம் செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/eggs-served-to-students-in-government-schools-lunch-suddenly-stopped




