புதுடெல்லி, இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவரும், பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவியில் இருந்த போது இளம் மல்யுத்த வீராங்கனைக ளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரை பதவியில் இருந்து நீக்கி கைது செய்யக்கோரி வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்ட நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். அவர் மீது 6 வீராங்கனைகள் புகார் அளித்தனர். எதிர்ப்பு வலுத்ததால் பிரிஜ் பூஷன் பதவியில் இருந்து ஒதுங்கினார். அத்துடன் டெல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான வழக்கு டெல்லி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு நீதிபதி அஸ்வினி பன்வார், 'பிரிஜ் பூஷன் சரண் சிங்கையும், வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டி ருந்த மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் உதவிச் செயலாளர் வினோத் தோமரையும் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து தீர்ப்பளித்தார். ஆனால் தீர்ப்பு குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. தீர்ப்பால் ஏமாற்றம் அடைந்துள்ள மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தனது எக்ஸ் பக்கத்தில் 'விரைவில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும். நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. தொடர்ந்து போராடுவோம்' என்று கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/othersports/sexual-harassment-case-former-wrestling-federation-chief-brij-bhushan-discharged




