சென்னை, ஜி.டி.நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஜி.டி.என் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 7-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடித்திருக்கிறார். மேலும் இந்தப் படத்தில் சத்யராஜ், தம்பி ராமையா, ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், கருணாகரன், அதிதி பாலன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கிருஷ்ணா இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். டிரைகலர் பிக்சர்ஸ் மற்றும் வர்க்கீஸ் மூலன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். படத்தின் வெளியீட்டை ஒட்டி ஜி.டி.என் படக்குழு மற்றும் டி.என்.ஏ கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் இணைந்து கோல்டு ரஷ் எனும் போட்டியை நடத்துகிறார்கள். போட்டியின் மொத்தப் பரிசு 28 கிராம் தங்கம் ஆகும். முதல் பரிசு பெறும் வெற்றியாளருக்கு 10 கிராம் தங்கமும், அடுத்த 9 இடங்களைப் பிடிப்பவர்களுக்குத் தலா 2 கிராம் தங்கம் வீதமும் பரிசளிக்கப்படுகிறது. போட்டியில் கலந்துகொள்வது எப்படி? போட்டியில் கலந்துகொள்ள கீழே இருக்கும் இணைப்பை கிளிக் செய்து கொடுக்கப்பட்டிருக்கும் டாஸ்குகளை முடிக்க வேண்டும். டாஸ்குகளை அதிகம் முடித்து, உங்கள் ஸ்கோரை அதிகப்படுத்தி வெற்றி வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொள்ளுங்கள். இந்தப் போட்டி ஆகஸ்ட் 6-ம் தேதி முடிவடைகிறது. அதற்குப் பின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/ready-to-win-28-grams-of-goldgold-rush-jointly-organized-by-gdn-and-dna-gold-and-diamonds




